search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி"

    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் 2 நாட்களாக தனியறையில் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் ராமசாமி (60) இவருக்கு சொந்தம் என்று சொல்லிகொள்ள யாரும் இல்லை.

    இவருக்கு ஒரு கை, ஒரு கால் செயல் இழந்த நிலையில் கேட்பாரற்று சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையில் திருவண்ணாமலை சாலை ஓரத்தில் மயங்கி கிடந்தார்.

    இவரை சமூக சேவகர் மணிமாறன் என்பவர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி செய்து விட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துவிட்டு வந்து விட்டார்.

    மருத்துவமணை ஊழியர்கள் கேட்பாரற்று கிடக்கும் பழைய பொருட்கள் வைக்கும் அறையில் உள்ள ஒரு கட்டிலில் இந்த முதியவரை போட்டுவிட்டு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக அவரது கையில் ஊசிகளை போட்டு சென்று விட்டனர்.

    ஊசி போட்ட இடத்தின் வழியாக நிறைய ரத்தம் அவரது உடம்பில் இருந்து வெளியேறி உள்ளது. முதியவர் மயக்க நிலையில் இருந்ததால் அவரால் பேசக்கூட முடியவில்லை. கூப்பிட்டால் கூட யாருக்கும் கேட்காத நிலையில் கிடந்துள்ளார், அந்த அறையில் இவரை தவிர வேறு ஒருத்தரும் கிடையாது.

    இரண்டு நாட்களாக ஒரு வேளை கூட தண்ணீர் சாப்பாடு அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை என கூறப்படுகிறது. ரத்தம் வெளியேறிய நிலையில் சோறு தண்ணீர் இல்லாததால் முதியவர் மயக்க நிலையிலேயே கிடந்துள்ளார்.

    இரண்டு நாள் கழித்து மணிமாறன் சென்று பார்த்த போதுதான் முதியவரின் பரிதாப நிலையை கண்டார். இது பற்றி புகார் கூறிய பின்னரும் அந்த முதியவருக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கவே இல்லை.

    சமூக சேவகர் வாங்கி வந்த உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென சமூக அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    ×